தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொங்கலை பண்டிகையையொட்டி கபடி, சுலோ சைக்கிள், ஊசிநூல் கோர்த்தல், கயிறு இழுத்தல், உரி அடித்தல், இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், கிரிக்கெட், கைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த 16ஆம் தேதி கறி நாள் என்பதால் கிராமங்களில் பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு என்பதால் கிராம மக்கள் அவர்கள் சொந்த பகுதியிலேயே பல்வேறு போட்டிகள் வைத்து மகிழ்ந்தனர்.

 



 

அப்பொழுது தருமபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஆண்டுதோறும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்துவது வழக்கம். இதேபால் இந்த ஆண்டும் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி இளைஞர்களுக்காக அறிவித்து, பந்தல் அமைத்து ஒரே இடத்தில்  போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்காக விழா குழுவினர் சார்பில் 15 கிலோ சிக்கன் பொரித்து போட்டியில் கலந்து கொண்ட 15 இளைஞர்களை ஒரு டேபிளுக்கு 3 பேர் என சமூக இடைவெளியில் அமர்ந்து ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடந்தது.


அதே போல் குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடந்தது. இந்த போட்டியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டு சில்லி சிக்கன் மற்றும் பிரியாணியை உற்சாகமாக சாப்பிட்டனர். பொங்கல் பண்டிகையில் வித்தியாசமான போட்டி என்பதால், ஏராளமான மக்கள் போட்டியை கண்டு ரசித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழு முடக்கம் அமல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனா விதியை மீறி போட்டி நடத்தப்பட்டது குறித்து அதியமான்கோட்டை காவல்ஹஞிலையத்திற்கை தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து  முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்று காவல் த்றையினர் விசாரணை நடத்தினர்.

 



 

 

இதில் கொரோனா ஞாயிறு ஊரடங்கு தடையை மீறி போட்டி நடத்தியதாகவும், நோய் தொற்று எளிமையாக பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாக, விழா நடத்தியவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் என மொத்தம் 40 பேர் மீது அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான முறையில் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.