சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை சேலம் மாநகராட்சியின் மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை ஏற்று நடத்தினர். மாமன்ற கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர். மேலும் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்ததால் அதனை பரிசீலனை செய்து பின்னர் நிறைவேற்றப்படும் என சேலம் மாநகராட்சியின் மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர் குணசேகரன், சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலைகளில் தோண்டப்படும் குழிகளால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து முடிந்திருந்தாலும் அதற்கு பயன்படுத்தப்பட்ட சாலைகள் சீர் அமைக்கப்படுவது இல்லை என்று கூறிய அவர் இந்தப் பகுதிகளில் உடனடியாக கான்கிரீட் சாலை அல்லது தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்பின் உரையாற்றிய மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி, எதிர்க்கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் அமைக்கப்படும் சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களிடம் கூறாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறினார்.
அவரைத் தொடர்ந்து விசிக மாமன்ற உறுப்பினர் இமய வரம்பன் பேசுகையில், இன்னும் சில தினங்களில் மழை காலம் தொடங்க உள்ளதால் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிக்காக ஈடுபடுத்தப்படும் தூய்மை பணியாளர்களுக்கு ரெயின் கோட், கிளவுஸ் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை சேலம் மாநகராட்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாமன்ற கூட்ட அரங்கில் இன்று புதிதாக இரண்டு எல்.இ.டி திரை வைக்கப்பட்டு இருந்தது. மாமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து நீண்ட நேரமாக எல்இடி திரை பயன்படுத்தப்படாமல் இருந்தது. கூட்டத்தின் இறுதியில் மாமன்ற உறுப்பினர் ஒருவர் எதற்காக இந்த திரை? என்னங்கய்யா போட போறீங்க? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மற்றொரு மாமன்ற உறுப்பினர் "சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடித்த படம் போடப் போறாங்க" என்று கூறினார். இதனால் மாமன்ற கூட்டத்தில் சிரிப்பொலி ஏற்பட்டது. அதன்பின் மாமன்ற கூட்டத்தின் நிறைவாக "எனது குப்பை எனது பெருமை" என்ற தலைப்பில் முற்றிலும் சேலம் மக்களை வைத்து உருவாக்கப்பட்ட பாடல் திரையிடப்பட்டது. இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்