கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, தந்தையே மகன் சுபாஷையும், அவரது பாட்டியையும் தண்டபாணி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அப்போது நீண்ட நேரம் போராடியதால் சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுசுயா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உடுமலைபேட்டை சங்கர் படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக வருகை தந்தார். இந்த நிலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் அனுசுயாவை சந்திப்பதற்கு அனுமதி மறுத்தது. இது தொடர்பாக கௌசல்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்போது அவர், அனுசுயாவை நேரில் சந்திக்க அனுமதித்தால் பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். மருத்துவ காரணங்களுக்காக அனுமதிக்க வில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தான் சந்தித்தால் பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது.



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாத இடைவேளையில் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு முறையான நீதி என்பது, ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான், மேலும் இவ்வளவு பெரிய ஆணவ படுகொலை நடந்தும் தமிழக அரசு மவுனம் காக்கிறது. சாதியத்திற்கு அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு தனி சட்டம் ஏற்றமாட்டோம், இதைப்பற்றி கவலை இல்லை என்று அரசு செயல்படுகிறது. இதற்கு முன்பாக எனது வழக்கில் ஆணவ படுகொலை நடைபெற்ற போது கௌசல்யாவுடன் நாங்கள் நிற்கிறோம் என்று ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். தற்பொழுது முதல்வரான பிறகு ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்றினால் தான் சாதிக்கு எதிராக இருக்கிறார் என்ற எண்ணம் வெளிப்படுத்த முடியும்,‌ இல்லையென்றால் சாதிக்கு துணை போகிறார், அதை ஆதரிக்கிறார் என்று எங்களுடைய மனநிலையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் ஓட்டுக்காக சாதிய ஆணவக் கொலையை அனுமதிக்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் ஒரு சில அமைப்புகளை தவிர்த்து சாதி ஆணவ கொலைக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முற்போக்கு பேசும் தமிழகத்தில் இது போன்ற நிலையால் மீண்டும் ஜாதி ஆணவ படுகொலைகள் தொடருமோ என்ற அச்சம் வருகிறது என்று பேசினார்