காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடிக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் வட கிழக்கு பருவமழையால் தமிழக, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்  தொடர்ந்து மழை குறைந்து வருவதால், நேற்று காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70,000 கன அடியிருந்தது சரிந்து, வினாடிக்கு 60,000 கன அடியாக குறைந்தது.

 



 

இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 40,000 கனஅடியாக உள்ளது.  தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, அருவிகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் காவிரி ஆற்றங்கரையோரம் வருவாய் பேரிடர், ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 



 

அரூர் அருகே வனப் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து புதிய நீர்வீழ்ச்சி தோன்றியதால்  பக்தர்கள் மகிழ்ச்சி

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பம்பட்டில் வனப் பகுதியில் சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில், பிரசித்தி பெற்ற  எமதீர்த்தம் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலுக்கு அரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வந்து எமது தீர்த்தத்தில் புனித நீராடி ஈஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

 



 

இந்நிலையில் அரூர் சுற்று வட்டார பகுதிகளில், மலை  பகுதிகளில் நல்ல கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேப்பம்பட்டி அருகே உள்ள வனப் பகுதியில் உள்ள எம தீர்த்தம் ஈஸ்வரன் கோயில் அருகே திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்பொழுது கோயில் அருகாமையில் புதிய நீர்வீழ்ச்சி ஒன்று தின்று, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.  இங்கு வரும் பக்தர்கள் இந்த புதிய நீர்வீழ்த்சியில் குளித்து மகிழ்ந்து ஈஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் பருவமழையால் புது அருவி உருவாகியுள்ளதால், ஈஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.