மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 


காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, கடந்த ஜூன் 12ம் தேதி முதல் இன்று காலை வரை 91 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்திற்காக 120 நாட்களில் 92 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்தது நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 



பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் தொடங்காத காரணத்தினாலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் போதிய அளவு போதிய திறக்கப்படாததினால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 31 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 8 டி எம் சி க்கும் கீழ் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பருவ மழை காலங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இதுபோன்று மிகவும் குறைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 1982 ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அக்டோபர் மாதத்தில் குறைந்த நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 31 அடியாக குறைந்துள்ளது.



குறிப்பாக அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கி மேட்டூர் அணை நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பருவமழை தொடங்கவில்லை. கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மேட்டூர் அணை படிப்படியாக குறைந்து வந்தது. விவசாயம் மட்டுமின்றி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் உள்ள நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையில் இருந்து உபரி நீராக இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.