தருமபுரியில் விவசாய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நல்லுசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்மையில் ஒரு கருத்து சொன்னார் அதில் தமிழகம் 3 இடத்தில் உள்ளதாக கூறினார். தமிழகம் முதல் இடத்தில் செல்ல வேண்டும் என்பது எங்களது ஆசை, இதற்காக அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், பனை, தென்னை, ஈச்சமரத்தில் இருந்து பதனீராகவும், கள்ளாகவும் இறக்கி குடிக்கலாம், விற்று கொள்ளலாம் மற்றும் இதனை மதிப்புகூட்டு பொருளாக மாற்றி உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தினால், நட்சத்திர விடுதிகளிலும், விமான நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டால், தமிழகத்தில் பொருளாதாரம் உயர்ந்து தமிழகம் முதல் மாநிலமாக திகழும்.
மேலும் கி. வீரமணி சுற்று பயணம் மேற்கொண்டார். அவர் பெரியார் கொள்கை எடுத்து கூறினார். ஆனால் பெரியார் கள் இறக்க ஆதரவு கொடுத்தவர். இதனால் அவர் பரப்புரையில் கள் இறப்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் பேசவில்லை என்றாலும் பரவாவில்லை எங்களுக்கு மேடையில் ஆதரவு கொடுக்க வேண்டும். பெரியார் கொள்கை என கூறும் அவர், கள்ளுக்கு ஆதரவாக பேசவில்லை என்றால் அவர் இருக்கும் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். கேரளாவில் கொரோனா கால கட்டத்தில் கூட, மது கடைகளை மூடினார்கள். ஆனால் கள்ளுக்கடை திறந்தே வைத்திருந்தார்கள். கள இறக்க எந்த நாடுகளிலும் தடையில்லை. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் தடையில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. கள் என்பது போதைப்பொருள் அல்ல. அது ஒரு உணவு. இதனை இறக்கி மரத்தடியில் விற்பனை செய்தால், எந்த பாதிப்பும் இல்லை. கலப்படம் என்ற பேச்சுக்கு இடமும் இல்லை.
அரசியல் அமைப்பு சட்டப்படி கள் உணவு பொருள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் அரசியில் அமைப்பு சட்டப்படிதான் முதல்வாரகி உள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கும் கடமை அவருக்கு உள்ளது. இதனால் அவர் அரசில் அமைப்பு சட்டப்படி கள் இறக்க அனுமதிகொடுக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்றால் முதல்ராக இருப்பதற்கே தகுதயில்லை. நான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு கொடுத்துள்ளேன். ஆனால் கள் இறக்க தமிழக அரசு விரைவில் அனுமதி கொடுக்கும் என்ற செய்தி கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பு விரைவில் வரும் என்ற நம்பிக்கையுள்ளது என நல்லுசாமி தெரிவித்தார்.