தமிழகம் முழுவதும் இன்று 1 முதல் 8 வகுப்புக்கு பள்ளிகள் இன்று திறப்பு. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள் ராமதாஸ் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.



586 நாட்களுக்குப் பிறகு 1 முதல் 8 வகுப்புக்கு பள்ளிகள் இன்று திறப்பு மணக்காடு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். கொண்டப்பநாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள் ராமதாஸ் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். அழகாபுரம் பெரிய புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


தமிழகத்தில் கொரானா தொற்று காரணமாக 586 நாட்களாக பூட்டியிருந்த 1 முதல் 8 வகுப்பு படிக்கும்  32,000 தொடக்க நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சேலம் பெரிய புதூர் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று துவக்கப்பட்டது. இன்று காலை 8:30 மணி பள்ளிக்கு வர தொடங்கிய மாணவ, மாணவிகளுக்கு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மலர் கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர் காலை முதலே மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வந்த மாணவ மாணவிகளுக்கு இந்த வரவேற்பு பெறும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்தோடு வரவேற்று அவர்களை சமூக இடைவெளியோடு அமர வைத்தனர். மேலும் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளையும்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். சில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதல். பல மாவட்டங்களில் இன்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது மாணவ மாணவிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



குழந்தைகளுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவது குறித்து மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். சிறுவன் ஒருவனை தூக்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அவரிடம் என்ன படிக்கப் போகிறாய் என்று கேட்டதற்கு, கலெக்டர் அக போவதாக மாணவன் கூறினான். 18 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் பள்ளிகள் பிறந்திருப்பது பெற்றோர்களுடைய சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பள்ளிகளில் பாதுகாப்பாக இருந்தாலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதன் மூலம் கொரோனா பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கூறினார்.