சேலம் ரயில் நிலையம் உட்பட்ட யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியை கோட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இதனால், சேலம் வழியாக இயங்கும் ரயில்களில் சிலவற்றை ரத்து செய்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (30 ஆம் தேதி) முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரையில் 28 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் கரூர் - சேலம் ரயில் (06838) ரத்து செய்யப்படுகிறது. 


டிசம்பர் 1, 2, 3 ஆம் தேதிகளில், சேலம் - கரூர் ரயில் (06831), சேலம் - கரூர் ரயில் (06851), சேலம் - கரூர் ரயில் (06837). கரூர் - சேலம் ரயில் (06836), கரூர் - சேலம் ரயில் (06852), பெங்களூரு - காரைக்கால் ரயில் (16529), காரைக்கால் - பெங்களூரு ரயில் (16530), கோவை - சேலம் ரயில் (06802), சேலம் - கோவை ரயில் (06803) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி, ஈரோடு - மேட்டூர் அணை ரயில் (06407), மேட்டூர் அணை - ஈரோடு ரயில் (06408), ஈரோடு - ஜோலார் பேட்டை ரயில் (06412), ஜோலார் பேட்டை - ஈரோடு ரயில் (06845), ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் (06411), ஈரோடு - திருச்சி ரயில் (06612) ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் (22153), நாளை (30 ஆம் தேதி), டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இயங்கும் சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22154) வரும் டிசம்பர் 1, 2, 3 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 



இதேபோல், டிசம்பர் 3 ஆம் தேதி கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680), சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (12679), சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் (12675), கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் (12676), சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243), கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244), கோவை - பெங்களூரு ஈரடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் (22666), பெங்களூரு - கோவை ஈரடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் (22665), பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677), எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.