சேலத்தில் அமைந்துள்ளது ஆத்தூர். சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் ஆத்தூர் வழியாகவே செல்வது வழக்கம். ஆத்தூரில் பயணிகளை ஏற்றிச்செல்வதும் வழக்கம் ஆகும். இந்த நிலையில், இன்று அதிகாலை சேலத்தில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது.

Continues below advertisement


அப்போது, அந்த பேருந்து ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அருகே வந்தது. அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில்  தனியார் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் பயணிகளை ஏற்றியுள்ளார். பயணிகளும் சென்னைக்கு செல்வதற்காக பேருந்து கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.


பேருந்தின் மீது மோதிய லாரி பேருந்தில் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தால் பயணிகள் சிலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் உள்பட மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.