பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் சேலம் ஏற்காடு சாலையில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவிற்கு வருகை தந்தார். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவிற்கு முன்பாக பாஜக கட்சியினருடன் செல்பி எடுத்துக் கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம், "சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பழங்கால திரை நட்சத்திரங்கள் இந்த இடம் ஒரு அடித்தளமாக இருந்தது. தற்போது உள்ள கோடம்பாக்கம் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா எடுப்பதற்கு ஒரு தனமாக இருந்ததோ அதுபோல சேலம் மாநகரில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்துள்ளது. பல திரைப்பிரபலங்களை அறிமுகப்படுத்திய இடமாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னத்தை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவின் முன்பு செல்பி எடுத்துக் கொண்டார். நமது சினிமா பிரபலங்கள் மதிக்க கூடிய இடமாக மாடர்ன் தியேட்டர் உள்ளது. நானும் இன்று இந்த வளைவு முன்பு செல்பி எடுத்துக் கொண்டேன். சினிமாவை, கலைத்துறையை யார் மதிக்கின்றார்கள் இந்த வளைவுத்தூனை மதிப்பார்கள். அப்படித்தான் முதல்வர் ஸ்டாலினும் மதித்துள்ளார் என்று கூறினார்.



மேலும், இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த வளைவு தூண் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை வைக்க வேண்டுமென திமுகவினர் விரும்புகின்றனர். அப்படி வைத்தால் இந்த இடம் ஒரு கட்சிக்கு சொந்தமாக மாறிவிடும். இத்தனை ஆண்டுகளாக இது அரசு நிலம், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்பதை தெரியாதது போல இப்போதுதான் அரசுக்கு தெரிவது போல் இதற்கு பின்னால் கல்லை நட்டுள்ளனர். கலைஞர் பேனாவிற்காக 80 கோடி ரூபாய் செலவு செய்பவர்கள், கலைஞர் சிலைக்காக பல நூறு கோடி செலவு பண்ணுவதற்கு தயாராக உள்ள திமுகவினர் இன்னொரு அடையாளத்தை அபகரிக்காமல், தங்களுடைய சுய அடையாளத்தை நிறுத்த வேண்டும். அதுதான் அவர்களுக்கு அழகு. கட்சியினர் தவறாக போனால் கூட அந்தக் கட்சியின் தலைவர் சரியாக வழி நடத்த வேண்டும். அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்க நினைத்தால் அது மக்கள் வெறுக்க கூடிய சூழலை உருவாக்கும். கலைத்துறையை மதிக்கக் கூடிய, கலைத்துறையால் சிறந்த வசனகர்த்தாவாக இருந்த கலைஞரின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்றால் இது போன்ற அடையாளம் மிக்க கலைத்துறையினர் போட்டு இருக்கின்ற, தமிழக மக்கள் வந்து பார்க்கக்கூடிய முக்கியமான தளத்தை அழித்து விடக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.



ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை இது போன்ற நடந்து கொண்டது, திமுகவிற்கு இடம் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் வன்மத்தை காட்டுவோம், அடையாளங்களை அழிப்போம், கலாச்சாரங்களை அழிப்போம், சினிமா துறையில் எவ்வளவு முக்கியமான இடமாக இருந்தாலும் ஒரு பக்கம் கலைத்துறைக்கு ஆதரவு என வேஷம் போட்டுக் கொண்டு இன்னொரு பக்கம் கலைத்துறையின் அடையாளமாக உள்ள சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்று இருக்கக்கூடிய பல நடிகர்களை, பல திரைப்படங்களை உருவாக்கிய இந்த இடத்தை திமுக அளிக்க நினைத்தால், அதற்கு முதல்வர் உடன் இருந்தால் அதனை பாரதிய ஜனதா கட்சி முன் நின்று போராடும் என்று கூறினார்.