சேலத்தில் பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்டதை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துணை ஜனாதிபதியை இழிவு படுத்துவது போல நடித்து வீடியோ பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. நாடாளுமன்றத்தில் மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்பதற்காக காலணி ஆதிக்கத்தில் உள்ள இடர்பாடுகளை நீக்கி இந்த சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. இதனை தடுப்பதற்கு என்ன காரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு நாடாளுமன்றத்தை புகை கொண்டு வீசியவர்களை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை தொடக்க திட்டமிட்டார்கள். அதிலும் நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் தான் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். 



இதனால் நாடாளுமன்றம் 66 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நல்ல சட்டங்கள் இருக்கக் கூடாது. ஆங்கிலேயர் காலத்தின் சட்டங்கள் தான் இருக்க வேண்டும். இந்தியாவை உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக வர விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய தீய சக்திகள், அன்னிய நாடுகளில் இருந்து கூலிகளை பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு கூட அடுத்த முறை நாடாளுமன்றத்திற்குள் வர முடியாது என்று கூறினார். பொன்முடி தீர்ப்பு குறித்த கேள்விக்கு, பொன்முடிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி வழக்கறிஞராக இருந்த போது கட்சியில் இருந்தார். நீதிபதியாக பரிந்துரைக்கும் போது எந்தக் கட்சியிலோ அமைப்பிலோ இருந்தாலும் அவர்கள் நீக்கிவிட வேண்டும். ரத்தினவேல் பாண்டியன் என்பவர் திமுகவில் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்தார். பின்னர் அவர் சுப்ரீம் கோர்ட் வரை நீதிபதியாக பணியாற்றினார். அவர் கொடுத்த தீர்ப்புகள் அனைத்தும் பொய்யானதாய் என கேள்வி எழுப்பினார். நீதிபதியை குறித்து பேசும் அருகதை திமுகவிற்கு கிடையாது. ஏற்கனவே நான் கூறியது போல நான்கு அமைச்சர்கள் பட்டியலில் உள்ளார்கள். விலங்குகள் மருத்துவர் பணியிட மாற்றத்திற்கு 15 லட்சம் வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதுவரை அமைச்சர்கள் விவகாரத்தில் எந்த வழக்குகள் பாரதிய ஜனதா கட்சி போடவில்லை என்றார்.



மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிஸ்கட், சில்லி சிக்கன் வெளியே இருந்து சிறைக்கு செல்கிறது. இதற்கு மாநில அரசின் பட்டியலின் கீழ் வரும் துறையில் உள்ளவர்களை விசாரணை நடத்தக் கூடாது என்று கூறுகிறார்கள். அடுத்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அதிக எம்பிக்களுடன் ஆட்சி அமைத்து சட்டங்களை புதுப்பித்து தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்படும். அப்போதுதான் மத்திய அரசின் தவறுகளையும் மாநில அரசுகளின் தவறுகளையும் தட்டிக் கேட்பதற்கு சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்படும், புதிய சட்டங்கள் ஏற்றப்படும். மத்திய அரசிற்கு நியாயமான வெள்ளை அறிக்கை கொடுத்தாள் வெள்ள நிவாரணத்திற்கு பணம் வழங்கப்படும். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நித்திஷ் குமார் அனைவரும் கட்டாயம் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து குறித்த கேள்விக்கு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்ள கூடாது என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். அமித் ஷா இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற போது கருப்பு கொடி காட்டியவர்கள், நிதீஷ் குமார் கூறிய போது அமைதியாக உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வர முடியவில்லை. இருப்பினும் மாநில அதிகாரிகள் வருவதற்கு முன்பாக மத்திய அரசு ஐந்து ஹெலிகாப்டர் மீட்பு பணிக்கு கொடுத்தது. இதற்காக மாநில அதிகாரிகளை நான் குறை சொல்லவில்லை. மக்களை பாதுகாப்பதில் மத்திய அரசு முழு கவனத்தை செலுத்தியது. மத்திய அரசின் மந்திரிகள் என்ன வேலை செய்ய வேண்டுமா அதை அங்கிருந்தே செய்துள்ளனர். கனிமொழி என்னை அழைத்து அங்குள்ள நிலவரத்தை கூறிய போது உடனடியாக பாதுகாப்பு துறை அமைச்சரிடம் பேசி உடனடியாக அதிகாரிகளை அனுப்பினர் என்று கூறினார்.