சேலம் மாநகராட்சி ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். மனநல மருத்துவரான இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கடந்த 12 ஆம் தேதி தனது மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார். அப்போது அவரிடம் சிகிச்சை பெறுவதற்காக மேட்டூர் புதுசாம்பள்ளியைச் சேர்ந்த கௌதம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் மருத்துவரின் அறைக்குச் சென்றதும், பாஸ்கர் அவரைப் பரிசோதித்திருக்கிறார். அப்போது திடீரென மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, மருத்துவர் பாஸ்கரை சரமாரியாக பெட்டியுள்ளார். இதில் பாஸ்கரின் தாடை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்தம் வெளியேறிய நிலையில், மருத்துவர் பாஸ்கர் கூச்சலிட்டார். உடனே மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே புகுந்து, நோயாளியை மடக்கிப் பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த கத்தியைப் பறித்து, மருத்துவர் பாஸ்கரை மீட்டு அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தகவல் அறிந்தவுடன் பள்ளப்பட்டி காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மருத்துவரை கத்தியால் வெட்டிய நோயாளியை மீட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த கௌதம் திருமணம் ஆகி திருமண இல்லற வாழ்வில் திருப்தி இல்லாததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் வேலையிலிருந்து நின்றுவிட்டு, மருத்துவர் பாஸ்கரிடம் மன அழுத்தத்துக்கு மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார். 6 ஆண்டுகளாக பணம் மட்டுமே வாங்குகிறீர்கள் ஆனால் திருமண வாழ்வில் எந்த சுகத்தையும் தான் அனுபவிக்கவில்லை மன அழுத்தத்தை தொடர்வதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தும் தனது நோய் குணமாகவில்லை என்று கூறி திடீரென கத்தியை எடுத்து, மருத்துவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்ற காவலுக்காக மனநோயாளியை நீதிபதியிடம் அழைத்துச் சென்றபோது நீதிபதி மனநல மருத்துவர் பரிந்துரைத்ததால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மனநல மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், மருத்துவ சங்கத்தின் உறுப்பினரான பாஸ்கர் மீது தாக்குதல் நடத்திய நபர் கூறிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மனநல மருத்துவர் சங்கம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மனநல மருத்துவர் சங்கத்தின் தலைவர், "மருத்துவ பாஸ்கர் மீது தாக்கிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அங்கீகரிக்கும் அந்த வேலையில் அந்த நபருக்கு தேவையான மனநல சிகிச்சை வழங்க சங்க உறுப்பினர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று உறுதிப்பட தெரிவிக்கும் என்று தெரிவித்தார். இத்தகைய சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மருத்துவர் பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கை மருத்துவர் மீது சட்டத்திற்கு புறம்பான தாக்குதல்களை தடுப்பதற்கு இன்றியமையாதது என்று தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம் தீர்மானமாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் மனநல மருத்துவரிடம் மனநல மருத்துவ ஆலோசனைக்காக வரக்கூடிய நபர்கள் தங்களின் மனநல பிரச்சினை தாக்குதல் விளைவிக்க கூடிய அசம்பாவிதங்களை மனநல மருத்துவர்கள் எதிர்கொள்கின்றனர். அவற்றை நேர்மறையாக அணுகி வருவதோடு மட்டுமல்லாமல் அத்தகைய நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளையும் இதர உதவிகளையும் மனநல மருத்துவர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.