தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொங்கலை கொண்டாட தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு உள்ளது. இதனை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த வகையில் சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் 10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 



இதன்படி, கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12048), மயிலாடுதுறை- கோவை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12083) ஆகியவற்றில் நாளை (14ம் தேதி), 17 ஆம் தேதிகளில் ஒரு சேர்கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதே போல், ஈரோடு-சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரசில் (22650) வரும் 16, 18 ஆம் தேதியும், சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரசில் (22649) வரும் 17, 19 ஆம் தேதியும், கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் (16616), மன்னார்குடி- கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615) ஆகியவற்றில் இன்று (13ம் தேதி), 15, 17 ஆம் தேதியும் தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (22668) நாளை (14 ஆம் தேதி), 16 ஆம் தேதியும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரசில் (22667) இன்று (13 ஆம் தேதி), 15, 17 ஆம் தேதியும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243), கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244) ஆகியவற்றில் இன்று (13 ஆம் தேதி) ஒரு ஏசி சேர்கார் பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட்டு இணைக்கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இதேபோல், கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து கேரளா மாநிலம் கொச்சு வேலிக்கு சேலம், ஈரோடு, கோவை வழியே பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, யஸ்வந்த்பூர்- கொச்சுவேலி பொங்கல் சிறப்பு ரயில் (06235), இன்று (13 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. யஸ்வந்த்பூரில் இன்றிரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பெங்களூரு, - பங்காருபேட்டை, குப்பம் வழியே சேலத்திற்கு நாளை (14 ஆம் தேதி) அதிகாலை 5.12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டிற்கு காலை 6.20 க்கும், திருப்பூருக்கு காலை 7.08 க்கும், கோவைக்கு காலை 8.12 க்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், கொல்லம் வழியே கொச்சுவேலிக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொச்சுவேலி-யஸ்வந்த்பூர் பொங்கல் சிறப்பு ரயில் (06236) நாளை (14 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு வழியே கோவைக்கு அடுத்த நாள் (15 ஆம் தேதி) காலை 9.22க்கும், திருப்பூருக்கு காலை 10.08க்கும், ஈரோட்டிற்கு காலை 10.50க்கும் வந்து, சேலத்திற்கு காலை 11.45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 5 நிமிடத்தில் புறப்பட்டு குப்பம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியே யஸ்வந்த்பூருக்கு மாலை 4.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.