தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள பனைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ (22) கருவுற்றிருந்த நிலையில், கருவை கலைக்க கடந்த 15 ம்தேதி ஒரு மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் இரத்த  போக்கு அதிகமாகி உடல் நலன் பாதிக்கப்பட்ட ஜெய்ஸ்ரீ முதலில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்தும் பலனிக்காமல் கடந்த 17 ம் தேதி உயிரிழந்துவிட்டார்.

 

இந்த தகவலறிந்த தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி  தருமபுரி சரக மருந்துகள் ஆய்வாளர் சந்திரா மேரி உள்ளிட்ட  மருத்துவ துறை அதிகாரிகள் சம்மந்தபட்ட மெடிக்கல் ஸ்டோரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கருக்கலைப்பிற்கான மாத்திரை விற்பனை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அந்த மெடிக்கல் ஸ்டோருக்கு சீல் வைத்து மூடினர். இதனை தொடர்ந்து மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்த செல்வராஜ் கைது செய்தனர்.

 



 

அதில் பாப்பாரப்பட்டி உள்ள ஒரு மருந்தகத்தில் கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்ற மருத்துவத்துறை அதிகாரிகள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். அதில் கருக்கலைப்புக்கான மாத்திரையை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள் மருந்து கடைக்கு சீல் வைத்து மூடினார். மேலும் கருக்கலைப்புக்கு செய்ய விற்பனை செய்ய வைத்திருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மருந்து கடை நடத்தி வந்த செல்வராஜ் என்பவரை பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

 

மேலும் கைதான செல்வராஜ் மனைவி தெய்வானை என்பவர், அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவதும், இவர் பணி இல்லாத ஓய்வு நேரங்களில் தனது கணவர் மருந்து கடையின் ஒரு பகுதியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவத் துறை சார்பில் செல்வராஜ் மனைவி தெய்வானையிடமும், விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர், இந்த மாத்திரைகளை விற்பனை செய்து உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த மருந்து விற்பனை செய்த விற்பனையாளர் யார் என்பது குறித்து மருத்துவத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையின் முடிவில் செவிலியர் தெய்வானை மற்றும் மருந்தை விற்பனை செய்த விற்பனை பிரதிநிதி ஆகியோர் மீது காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பு செய்ய சாப்பிட்ட மாத்திரையால் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.