சேலம் மாவட்டம் வட்டமுத்தாம்பட்டி பகுதியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய ஒற்றுமை பயண நினைவு கொடியேற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் பாஜக கட்சி பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் 5400 மதங்கள் உள்ளது. ஏறக்குறைய பாதி மதங்கள் இந்தியாவில் உள்ளது. ஆனால் பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே இறைவழிபாடு என்று கூறினார் இது சாத்தியமற்றது. பல மதங்கள், பல இறை வழிபாடுகள் உள்ள நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை தான் சாத்தியம் என்பதை உணர்ந்து, இந்து மதத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையாகவும், இந்தியாவில் அனைத்து நம்பிக்கை உடையவர்களுக்கும் இடம் உள்ளது கூறி, அரசியல் சட்டத்திலும் எழுதப்பட்டுள்ளது. எல்லாம் மதங்களுக்கும், மொழிகளுக்கும் சமஉரிமை உள்ளதே என்று எழுதப்பட்டது. இதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மாற்ற நினைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவது தான் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீன எல்லையில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இது போன்ற விஷயங்கள் நடக்கின்றபோது நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும். இன்று வரை பிரதமர் மோடி வாய் திறக்காமல் உள்ளார். நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார். இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்று பேசினார். சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லும் பாஜக அரசு தனியாருக்கு கொடுக்க முயற்சிக்கிறது அப்பொழுது இருந்த அதிமுக ஆட்சியும் ஒத்துழைப்பு வழங்கியது. நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் இரும்பாலையை எப்படி தனியார் வாங்க முடியும். லாபம் இருந்தால் மட்டுமே வாங்குவார்கள். லாபத்தை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை தனியாருக்கு இருக்கும்போது, அரசுக்கு ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.



வடமாநிலங்களில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் பணிகள் முடிந்து பிரதமர் மோடி திறந்து வைத்துவிட்டார். ஆனால் தமிழகத்தில் செங்கலை கூட வந்து இறக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதாவிற்கு பங்கு இல்லையா?பொறுப்பில்லையா? பாஜக டெல்லியில் அமர்ந்து, தமிழகம் புறக்கணித்துள்ளது எனவே உதவி செய்யுங்கள் என்று கேட்க வேண்டாமா? என்றும் நன்றாக இயங்கும் தமிழக அரசு குறை செல்வதையும், அரசியல் செய்வதையும் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார். அண்ணாமலை வாங்கிய வாட்ச்க்கு ரசீது எங்கே என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி கேட்டுவிட்டார். அமைச்சரின் வாயை அடைப்பதற்காக தான் ரசீது இருக்கிறது என்று கூறினால் பிரச்சினை முடிந்தது ஆனால் அதைக் கூட சொல்ல மறுக்கிறார்கள் என்றார். இந்திய வரலாற்றை சம்பந்தப்பட்டவர்கள், அப்போது வாழ்ந்த மக்கள் எதைக் குறிப்பிட்டு உள்ளார்களோ? அதுதான் வரலாறு. மாற்றி எழுதினால் அது வரலாறு அல்ல, திரித்து எழுதுகிறார்கள் என்பது தான் பொருள். பங்கு இல்லாதவர்கள் பெயர்களை எழுத வேண்டும் என்று ஆளுநர் ரவி சொல்கிறார். அவரது பிஏ கேட்பார்,வரலாற்று ஆசிரியர்கள் எப்படி கேட்பார்கள். வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது இனஅழிப்பதற்கு சமம் ஆகும். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் வரலாற்றை எழுதுவதாக முடிவு செய்யப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களையும், தென்னிந்தியாவையும் புறக்கணித்துவிட்டு வரலாற்றை எழுத முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர், அப்பட்டமாக பாஜக நினைப்பதை செய்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ் அஜந்தாவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த வரலாற்றை எழுதினால், இந்தி பேசுகின்ற ஒன்பது மாநிலங்களில் உள்ளவர்கள் மட்டும் தான் உறுப்பினர்கள். எவ்வளவு புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்று கூறினார். பெருமுதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று நிர்மலா சீதாராம் கூறுவது, தவறான வாதம், ரிசர்வ் வங்கியில் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில், பட்ஜெட்டில் கடனை காட்டவில்லை. வாங்கி கடனை காட்டவில்லை என்றால் கடன் முடிந்துவிட்டதாக தான் அர்த்தம். இதனை மன்னிக்க முடியாது என்றார். தமிழக அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் இருப்பது குறித்து கேள்விக்கு, போராட்டங்கள் என்பது அரசியல் நடவடிக்கையாக கருத முடியாது. தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை கேட்கிறார்கள் எந்த ஒரு கோரிக்கையும் ஒரு அரசு 100 சதவீதம் முடித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட ,தமிழகஅரசின் நடவடிக்கை என்பது தவறை சுட்டிக்காட்டினால், தமிழக முதல்வர் தவறை திருத்திக் கொள்கிறார். எனவே தொழிற்சங்கங்களை மற்றும் மற்றவர்கள் கோரிக்கை பரிசீலிப்பார் என்றும் பேசினார்.



கறவைமாடு வைத்திருப்பவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள். மாட்டு தீவனங்களின் விலை உயர்ந்துள்ளதால் கொள்முதல் விலையை கூட்டுறவு பால்சங்களில் உற்பத்தி செய்பவர்கள் கேட்கிறார்கள். அதற்கு கொடுக்கும்போது ஆவின் பால் விலை உயரத்தான் செய்யும். சில விஷயங்களை மார்க்கெட் தான் முடிவு செய்யும். விலையேற்றும் விலை குறைவு என்பது மார்க்கெட் தான் முடிவு செய்யும், பாலிற்கு வரி போட்டிருந்தததால் தான் அதன்மூலமாக விலை உயர்ந்திருந்தால் தான் தவறு எனவும் விளக்கமளித்தார். புதுச்சேரி முதலமைச்சர் சுதந்திரமாக பேச அனுமதித்துள்ளோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறுகிறார். முதலமைச்சர் ஒரு கருத்தை சொல்வதற்கு அனுமதித்துள்ளோம் என்று கூறுவது எவ்வளவு பெரிய சர்வாதிகாரம் என்றார். ராகுல்காந்தி, கமல்ஹாசன் சந்திப்பு அரசியல் மாற்றம் எல்லாம் ஏற்படாது. இந்த சந்திப்பை வரவேற்கிறோம், கமல்ஹாசன் தேசியஉணர்வு படைத்தவர், பண்பாளர் ,மக்களிடையே செல்வாக்கு பெற்றவர். அவர் ராகுல்காந்தியுடன் நடைபயணம் செல்வதை வரவேற்கிறோம். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைக்க போகிறது என்று கூறியது, அவருடைய கருத்து அவர்கள் கூறுகிறார்கள், எங்களுடைய கருத்தை நாங்கள் கூறியிருக்கிறோம், அவரவர் கருத்தை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.