மேட்டூர் அருகே காணாமல் போன தமிழக மீனவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாரா..? - நடந்தது என்ன..?

கர்நாடகா வனப்பகுதியில் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அதனைக் கண்டு கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியை வான் நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

தமிழக - கர்நாடகா மாநிலங்களில் எல்லையான மேட்டூர் அடுத்துள்ள பாலாறு என்ற வனப் பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14 ஆம் தேதி இரண்டு பரிசல்களில் மூன்று பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அதில் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் பாலாற்றின் வழியாக சென்றுள்ளனர். பரிசலில் சென்றவர்கள் ஊர் திரும்பிய நிலையில், கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பாலாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

Continues below advertisement

இதற்கிடையே, கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கர்நாடகா வனப்பகுதியில் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அதனைக் கண்டு கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியை வான் நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து இரண்டு பரிசல், இரண்டு மான் இறைச்சி மற்றும் டார்ச் லைட்டை கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் பதிவாகியுள்ள தகவல் அறிக்கையில், கடந்த 14 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கர்நாடகா வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்து வேட்டையாட பயன்படுத்திய டார்ச் லைட், பேட்டரி, ஆண்ட்ராய்டு போன் மற்றும் மூன்று கவர்களில் இருந்த மான் இறைச்சிகளையும் கர்நாடகா வனத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனிடையே இன்று காலை காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத மர்ம நபரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அங்கு சென்ற கர்நாடகா மற்றும் தமிழக காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் ராஜாவின் உடலா? கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூட்டில் ராஜா உயிரிழந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழகம் கர்நாடக எல்லையான பாலாறு வழியாக இரு மாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அருகே பாலாறு பகுதியில் பதற்றம் எழுதுவதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டதா என விசாரணை நடந்து வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola