ஒகேனக்கல் துணை சுகதார நிலையம், ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திடீரென ஆய்வு செய்தார்.

 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒகேனக்கல் துணை சுகதாரதா நிலையம், ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை மற்றும் உள் கட்டமைப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்பொழுது  ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இரு மருத்துவர்களில் ஒருவர் ஓராண்டு கால மகப்பேரு மருத்துவ விடுப்பில் உள்ளதையும் அமைச்சர், பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு  வேறு ஒரு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும்  ஒகேனக்கல் மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக இருப்பதால் அங்குள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவ வசதிகள் செய்ய வேண்டியுள்ளது.  எனவே, இந்த துணை சுகாதார நிலையத்தில் இ- சஞ்சீவினி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தின் மூலம்  இங்கு பணியாற்றும் செவிலியர்கள் ஊட்டமலை ஆராம்ப சுகாதாரா நிலையத்தில் உள்ள மருத்துவர்களோடு காணொலிவாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவச் சேவையாற்ற உள்ளனர்.   

 



 

 

மேலும் ஊட்டமலையில் பணியாற்றும் மருத்துவர்கள் மாற்றுப்பணி முறையில் ஒகேனக்கல் துணை சுகாதார நிலையத்தில் பணியாற்ற உள்ளனர்.   ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மினி ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இப்பணிகள் விரைவில் நிறைவேற்றபடும்.  ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பிரதான சாலைக்கும் நடுவே உள்ள மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.  இதன் காரணமாக நோயாளிகள் வந்து செய்வதற்கு சிரமமாக உள்ள நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த சாலையை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து சுமார் ரூபாய் 29 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளததாக அமைச்சர் தெரிவித்தார்.

 



 

தருமபுரியில் கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி சுரேஷ் என்பவர் வீட்டில் சிபிசிஐடி பிரிவினர் நடத்திய சோதனை 6 மணி நேரத்திற்கு பின் நிறைவு-சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல். 

 



 

 

சென்னையில் கனிம வளத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் என்கிற சுரேஷ்குமார், ஏற்கனவே தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனிம வளத் துறையில் பணியாற்றிய உள்ளார். இவர் மீது ஏற்கனவே ஒப்பந்தமான முறைகேடு தொடர்பாக சிபிசிஐடியில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட சிபிசிஐடி பிரிவினர் இன்று காலை தருமபுரி சூடாமணி தெருவில் உள்ள சுரேஷ்குமாரின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சேலம் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து காலை முதல் நடைபெற்ற இந்த சோதனை சுமார் 6 ம ஞாபகத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கனிம வளத் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் இல்லத்தில், சிபிசிஐடி பிரிவினர் சோதனை நடத்தியதில், தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.