தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா மற்றும் அப்பகுதியில் புதியதாக நடைபெற்று வரும் இலங்கை அகதிகளுக்கான 50 குடியிருப்புகள் பணிகளை இன்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

 

அதனையடுத்து இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 13 கிராமங்கள் பயன்பெரும் வகையில் நீர்வள நிலவள மே;பாட்டு திட்டத்தின் மூலம் சின்னாறு அணை கால்வாய் கேசர்குலிஅல்லா அணை கால்வாய்கள், குமாரசெட்டி ஏரி மற்றும் 15 அணைகட்டுகளை சுமார் 19 கோடி மதிப்பிலான புரணமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து இன்று துவக்கி வைத்தார். 



 

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழக முதல்வரின் முயற்சியில் கொண்டு வரப்பட்டது. தற்போது அப்பணியின் 2 ம் கட்ட பணிகள் ஆய்வில் உள்ளது என்றும், விரைவில் அப்பணிகள் நிறைவு பெற்று தமிழக முதல்வர் நேரில் வந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார். அதே போல் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கலில் வீணாகும் உபரி தண்ணீரை மாவட்டம் முழுவதும் ஏரிகள் மூலம் கொண்டு செல்லும் பணிகளுக்கான முயற்சிகளை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனர்.

 

மேலும் செய்தியாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதை குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை ஒரு அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு சீசன் அரசியல்வாதி. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கூறி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தவர் தான் அவர், தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவரை பாஜக மாநில தலைவராக நியமித்துள்ளது. தலைவராக இருப்பவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். ஒரு நான்காம் தர பேச்சாளர் போல பேசி வருகிறார். பாஜகவிற்கு ஒரு கொள்கையும் கிடையாது அவர்கள் பேசி பேசி கட்சியை வளர்க்க வேண்டும் என்ற பணியில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மக்களை சந்தித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறோம்.



 

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை 70% நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். திமுக அரசு கொடுக்கும் சலுகைகளை பெரும் அளவிற்கு அண்ணாமலை பயனாளிகள் பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். அவர் உயர் வகுப்பைச் சார்ந்த அட்டையை வைத்திருக்கலாம். அண்ணாமலை தனது கட்சி இந்தியாவை ஆளுங்கின்ற எண்ணத்தில் தொழிலதிபர்களை மிரட்டி கொண்டியிருக்கிறார். அவருடைய பாணியே மிரட்டல் பாணி தான். அவர் எந்தவகையில் மிரட்டுகிறார் என்பது மக்களுக்கு தெரியும். அவருடைய மிரட்டல் பாணி தமிழகத்தில் செல்லாது என்று தெரிவித்தார்.  இந்நிகழ்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர். பழனியப்பன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் தர்மசெல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.