தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழானூர் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்தது. இதனை குகால்நடைகள் மேய்ப்பவர்கள் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் சித்தேரி அருகே வெள்ளாம்பள்ளியை சேர்ந்த பார்வதி, (32) என்பது தெரியவந்தது. பார்வதிக்கு ஆண்டியப்பனுடன் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் உள்ள நிலையில் கடந்த 9 வருடங்களுக்கு முன் கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளோடு தனியாக கீரப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு திருமணம் ஆன வாழத்தோட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், (42) என்பருடன் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
உண்ணாமலை என்ற பெண்ணுடன் சக்திவேலுக்கு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி உண்ணாமலை இறந்துவிட்டதால், இரண்டாவது முறையாக ஏழு வருடத்திற்கு முன்பு இந்துமதி, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இரண்டாவது மனைவி இந்துமதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போன பார்வதிக்கும் இவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.