சேலம்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு ,22,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. 

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் 6,408 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,223 கனஅடியாக குறைந்​தது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக இருந்த நிலை​யில், நேற்று காலை நீர்​திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடி​யாக​வும், மாலை​யில் 22,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 118.25 அடி​யாக​வும், நீர் இருப்பு 90.70 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

ஒகேனக்கலின் நீர்வரத்து குறைவு

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், நீர்வரத்து படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா போன்ற இடங்களில் மழை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

நீர்வரத்து குறைந்ததால், ஒகேனக்கலின் பிரதான அருவிகளில் ஆர்ப்பரித்து வந்த தண்ணீர் ஓரளவிற்கு குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதிலும், பரிசல் சவாரியிலும் முன்புபோல் உற்சாகம்கொள்ளவில்லை. ஆனாலும், விடுமுறை நாட்களில் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இருப்பினும், நீர்வரத்து மேலும் குறைந்தால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த 13-ம் தேதி காலை 6 மணி​யள​வில் நீர்​வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக பதி​வானது. இரவு 7 மணி​யள​வில் 9,500 கனஅடி​யாக நீர்​வரத்து குறைந்​தது. அதே​போல, கடந்த 14-ம் தேதி காலை விநாடிக்கு 6,500 கனஅடி​யாக நீர்​வரத்து குறைந்​தது. அன்று முதல் நேற்று மாலை வரை விநாடிக்கு 6,500 கனஅடி​யாகவே நீர்​வரத்து தொடர்​கிறது.