நடப்பாண்டில் 3வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

நடப்பாண்டில் 3 வது முறையாக நேற்று இரவு 7.05 மணிக்கு அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

Continues below advertisement

நடப்பாண்டில் 3 வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 9 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்த நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3 வது முறையாக எட்டியது.

Continues below advertisement

 கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி மேட்டூர் அணை, அணையின் கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 42 வது முறையாக நிரம்பியது. மூன்று மாதத்திற்கு பிறகு நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை அக்டோபர் 12 ஆம் தேதி எட்டியது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 3 வது முறையாக இன்று (07.12.2022) இரவு 7.05 மணிக்கு அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதுமாக  (சுமார் 9 ஆயிரம் கன அடி நீர்) அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3 வது முறையாக எட்டிருப்பது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மழை இருப்பதால் மேட்டூர் அணையில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அனைத்து வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.

நீர்வரத்தானது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினருக்கு மேட்டூர் அணையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

Continues below advertisement