ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்க பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள் மார்கழி முதல் நாளிலிருந்து வாசலில் கோலமிட்டு பிள்ளையார் வைத்து முதல் நாளுக்கு ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு 2 பூவும் என மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு, அதில் வண்ணமிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்கழி முதல் நாள் என்பதால் பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசல், சமையல் அடுப்பெனை சுத்தம் செய்து, மாட்டுச் சானம் தெளித்து கோலமிட்டனர். இந்த கொலத்தின் நடுவில் மாட்டுச்சானத்தில் பிள்ளையார் வைத்து, அதில் பூசணி பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களை வைத்தனர். ஒரு சில பெண்கள் மவுன விரதமும் இருந்து வருகின்றனர். தொடர்ந்து நாளுக்கு ஒரு என முதல் நாளில் ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு இரண்டு பூக்களும் என வாசலில் வைத்து வரப்படும்.
தொடர்ந்து மார்கழி மாதம் கடைசி நாளான பொங்கல் தினத்தில், முப்பது நாள் கோலமிட்டது போல அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து, தை முதல் நாளை வரவேற்பர். இதற்காக இன்று மார்கழி முதல் நாளில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் பல வண்ணங்களில் கோலமிட்டனர்.
தருமபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பாண்டு கரும்பு அரவை பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான அரவை பருவத்தில் கரும்பு அரவை பணியினை தமிழக உழவர் மற்றும் விவசாய துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் அரவை நடைபெறுவதற்கு ஆலையில் 7215 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் 2,40,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கிய அரவை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரம் வரை 70 நாட்கள் நடைபெறும். மேலும் விவசாய திட்டத்திலிருந்து ஆலை அரைவுக்கு கரும்பினை கொண்டு வர 95 லாரிகள், 74 டிராக்டர்கள், 35 டிப்பர் மற்றும் 17 மாட்டு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆள் பற்றாக்குறை, கூலி குறைக்க இரண்டு இயந்திரங்கள் மூலம் கரும்பு அறுவடை செய்யப்படவுள்ளது. எதிர் வரும் 2022-23-ம் ஆண்டில், 14,000 ஏக்கர் கரும்பு பதிவு செய்து 4,30,000 மெட்ரிக் டன் அரவை மேற்கொள்ள விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்திறுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, எம்எல் ஏக்கள் வி.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி, மேலாண்மை இயக்குநர் ரஹமத்தல்லா கான் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.