தமிழ்நாடு முழுவதும் கடந்த 9ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்று பாதித்து அந்த பள்ளிகள் தற்காலியமாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை ஒருவருக்கு கொரொனொ தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொரணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஆதிலோக நாயகி கடந்த 3ஆம் தேதி மாலை அதிக அளவில் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் ஆதி லோகநாயகியின் மகன் ஹரி பிரசாத் அவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அவரது மகன் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தற்போது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
இந்த தகவல் இன்று மாவட்டம் முழுவதும் பரவிவிய நிலையில் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குமா அல்லது விடுமுறை அளிப்பார்களா என்பது தெரியாத நிலையில், அப்பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் ,தொற்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதால் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் கோவை, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கும் ஆசிரிகளுக்கும் தொற்று பாதிப்பு அந்தந்த பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அவரது மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் பெற்றோர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.