கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 11 ஆயிரத்து 896 கன அடியில் இருந்து 14 ஆயிரத்து 531 கன அடியாக அதிகரிப்பு 

 

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த  தொடர் மழை காரணமாக கர்நாடக மாநில அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து  அதிகரித்து வருகிறது. இதனால்   கர்நாடக மாநில அணைகளின் நீர்மட்டம் வேகமாக  உயர்ந்து அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால்  காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும்  உபரி நீர் அதிகரிக்கப்பட்டது தற்பொழுது மழைப்பொழிவு குறைந்ததால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளது

 


 

இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124.80  தற்போதைய நீர் மட்டம் 120.67 அடிவரை நிரம்பியுள்ளது இதனால் அணைக்கு 13ஆயிரத்து 108  கன அடியாக நீர்வரத்து உள்ளது தொடர்ந்து அணையில் இருந்து  வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர்  2 ஆயிரத்து 146 கன அடியில் இருந்து  5 ஆயிரத்து 531 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபிணி அணையின்  மொத்த  கொள்ளளவு 84.00 அடியில்  தற்போதைய நீர் மட்டம் 81.95 அடியாக  நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்து  9ஆயிரத்து 741   கன அடியாக உள்ளது.

தொடர்ந்து அணையில் இருந்து  வினாடிக்கு ஆயிரம்  கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

 


 

இன்று காலை நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் 2 அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும்  உபரி நீரின் அளவு வினாடிக்கு 11 ஆயிரத்து 896  கன அடியிலிருந்து அதிகரிக்கப்பட்டு  14 ஆயிரத்து 531 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது மேலும் இரண்டு அணைகளுக்கும் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து இருப்பதால் தெற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துக்கொண்டிருந்த நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இதனால் விவசாயிகள் சற்று கவலை அடைந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவானது அதிகரித்துள்ளது.