தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒகேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருச்சி மாநகராட்சியில் கோட்டத்தலைவர் பதவிக்கு திமுக- காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் போட்டி

 




 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சாவூரில் அமைக்கப்படும் சர்வதேச தர கால்பந்து மைதானம் - பணியை நிறுத்த கால்பந்து வீரர்கள் கோரிக்கை

தொடர்ந்து வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு ஒகேனேக்கல்லில் பரிசல் பயணம் செல்வதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து கோடை காலம் தொடங்கி வெப்பம் வீசுவதால்,    ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனேக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஞாயிறு விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- உக்ரைனில் சிக்கி இருக்கும் மகனை மீட்க கோரி திருச்சி ஆட்சியர் காலில் விழுந்து கதறிய பெற்றோர்