நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரை நிர்வாணமாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிகாரத்தை கையில் எடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்படதைக் கண்டித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க திராணி இல்லாத கட்சி திமுக குறுக்கு வழியைக் கையாண்டு கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றது என்று கூறினார். மேலும், காவல்துறைநினர் செய்ய வேண்டிய செயலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்துள்ளார். கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததற்கு பரிசு சிறைத்தண்டனை.
ஜெயகுமார் பிடித்துக் கொடுத்த திமுக பிரமுகர் நரேஷ் குமார் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர். தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கைகோர்த்து திமுகவை வெற்றி பெறச் செய்துள்ளது. ரவுடிகளும் குண்டர்களும் சுதந்திரமாக திரிந்த காரணத்தால்தான் கள்ள ஓட்டு போட்டும் சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் வல்லமை படைத்தவர்கள். இதுவரை தமிழகத்தில் இல்லாத நிலை இந்த தேர்தலில் நடந்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக 100 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கும் ஆனால், திமுக உண்மையான வெற்றி பெறவில்லை;
பணம் பரிசுப்பொருட்களை கொடுத்து மாயாஜால வெற்றி பெற்றுள்ளது. கோவையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது அனைத்து ஊடகங்களிலும் காட்டிய போதும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். திமுகவில் உழைப்பவர்களுக்கு அந்தஸ்து கிடையாது; பல வழக்குகள் இருந்தால்தான் அந்தஸ்து கிடைக்கும் என்று கடுமையாக விமர்சித்தார்.
குற்றவாளி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்; குற்றத்தை கண்டித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஜெயக்குமார் திமுக அரசால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ளார். அதிமுகவை கொடுக்க நினைத்தால் திமுக அரசு இருக்கும் இடம் தெரியமல் அழிந்துவிடும் என்று கண்டித்தார்.
அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேடையில் நின்றிருந்த செம்மலை திடீரென மயங்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உச்சி வெயில் அதிகமாக இருந்தாலும் எனக்கு ஒன்றும் ஆகாது, முதல்வர் ஸ்டாலின்போல சொகுசு வாழ்க்கை வாழவில்லை. கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு முன்னேறி உள்ளேன். இது மம்முட்டி பிடித்த கை, ஏர் பிடித்த கை என்று பேசினார்.
Also Read: Maha Shivaratri 2022: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா? விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...