தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் சென்று அருவிகளின் அழகை கண்டு ரசித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது.
இதனை தொடர்நது கடந்த ஓராண்டுக்கு முன்பு கொரோனா தொற்று அதிகமாக பரவியிருந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறைந்ததால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்கு தொற்றுக்கு பாதிக்காத வகையில், சுற்றுலாப் பயணிகள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் ஆற்றிலும் அருவி பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதித்து பல்வேறு நிபந்தனையுடன் சுற்றுலா தளம் செயல்பட்டு வந்தது.
தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியிலும், ஆற்று பகுதிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம், அனுமதி வழங்கியுள்ளது. கடர்ந்த ஓராண்டிற்கு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என்ற அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது வெப்பம் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டருகே இருந்த ஓலையில் தீ- தண்ணீர் ஊற்றி அணைத்து வாக்கு சேகரித்த திமுகவினர்
தருமபுரி மாவட்டம் அரூர் வர்ணதீர்த்தம் பகுதியைச் சேர்ந்த அப்துல் என்பவர் வீட்டருகே அவரது நண்பர் ஒருவர் சுப நிகழ்ச்சிகளுக்கு, பந்தல் அமைப்பதற்காக சுமார் 500 தென்னங்கீற்று ஓலையை கொண்டு வந்து வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தெருவில் இருந்த குப்பைகளுக்கு, யாரோ தீ வைத்துள்ளனர். அந்த தி காற்றின் திசையில் பரவி, அப்துல் என்பவர் வீட்டருகே இருந்த ஒலைகளின் மீது விழுந்து, தீப்பிடித்தது. இதனை அறிந்த அப்துல் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, எரியும் நெருப்பை அணைக்க முயற்சி செய்தார்.
அப்பொழுது அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி.செந்தில்குமார் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக அந்த திமுகவினர் ஓலை தீப்பிடித்து எரிவதை கண்டு உடனடியாக அந்தத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டிலிருந்த தண்ணீரைக் கொண்டு வந்து தீ பரவாமல் முழுவதுமாக அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டதால், அருகில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.