கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் ராம்நகரில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்த திமுகவிற்கு விருப்பமில்லை. 525 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக, அதை நிறைவேற்ற முடியவில்லை, மக்களிடம் பதிலளிக்க திராணியில்லை. அதனால் தான் மக்களை சந்திக்காமல் காணொளி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாங்கள் 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி செய்ததால் நெஞ்சை நிமிர்ந்தி வாக்கு கேட்கிறோம்



ஒசூர் குட்டி ஜப்பானாக உள்ளது. இந்த மாநகராட்சி வந்தோரை வாழ வைக்கும் பகுதியாக உள்ளது. மாநகர அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்பு மூலம் தான் நிறைவேற்ற முடியும் அதிமுக மட்டும் தான் மக்களுக்கான கட்சி, அதிமுகவினர் தான் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கக்கூடியவர்கள் எனவே அதிமுகவிற்கு வாக்கு அளியுங்கள். அதிமுகவில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு, திமுகவில் உழைத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில், நிறைய திட்டங்களை ஒசூருக்கு வழங்கி உள்ளோம், ஒசூரை மாநகராக அறிவித்தது அதிமுக, அதனால் ஓசூருக்கு முதல் மேயராக அதிமுகவை சேர்ந்தவர் வர வாக்களியுங்கள், அப்பொழுதுதான் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். புறநகர் பகுதியில் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர்கள் அதிமுகவினரே வர வேண்டும். மாதந்தோறும் பெண்களுக்கு 1000 எங்கே? கல்விக்கடன் தள்ளுபடி எங்கே? தாய்மார்கள் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைக்களை அடமானம் வைக்க ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் குறிப்பிட்டதால் அணிந்த நகைகளை அனைத்து வங்கிகளிலும் அடமானம் வைத்து நிற்கதியாக உள்ளனர்.



48 லட்சம் பேரில் 13 லட்சம் பேரின் கடன் மட்டுமே தள்ளுபடி என்கின்றனர். 35 லட்சம் பேரின் நிலைமை? அசலுடன் வட்டியும் கட்டினால் மட்டுமே மீட்க முடியும், ஸ்டாலின் பேச்சை கேட்டு நகைகளை மீட்க முடியாத நிலைமை திமுகவிற்கு வாக்களித்து நகைகளை பறிகொடுத்துள்ளோம். அம்மாவின் சாதனை வரலாற்று சாதனை, யாராலும் நிறுத்த முடியாது, அரசுப்பள்ளி குழந்தைகளும் விஞ்ஞான கல்வி பெற மடிக்கணினி வழங்கப்பட்டது. வல்லரசு நாடுகளிலும் இந்த திட்டங்கள் இல்லை. வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். திமுகவின் சவாலுக்கு நாங்கள் தயார் என கேள்வி எழுப்பினேன் இதுவரை பதிலே இல்லை. கைதட்டும் பொம்மை முதல்வர் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறார். நீட் என்னும் நச்சு விதையை விதைத்தது காங்கிரஸ், ஆட்சியில் அங்கம் வகித்தது திமுக, அப்பொழுது தான் நீட் கொண்டுவரப்பட்டது. அம்மா அவர்கள் நீட் வேண்டாம் என கெஞ்சினார். 2013 ஆம் ஆண்டு மூன்று பேர்க்கொண்ட நீதிபதிகள், நீட் தேர்வினால் பாதிக்கப்படுவார்கள் தடை செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது



காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக பேசவில்லை. திமுக மறுசீராய்வு மனு போட்டபோது, அம்மா அவர்கள் வேண்டாம் என கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்ததாலே நீட் கொண்டு வரப்பட்டது. என்னுமிடம் ஆதாரம் உள்ளது. எங்கே அழைத்தாலும் விவாதத்திற்கு தயார். ஒசூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஓகேனேக்கல் கூட்டு குடிநீர் வழங்கும் திட்டம், கெலவரப்பள்ளி அணையில் இருந்து இராமநாயக்கன் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. 5 கோடி ரூபாயில் பூங்கா, நடைப்பாதை, சுகாதாரமான ஆர்ஓ குடிநீர் வழங்கப்பட்டது நெரிசலை குறைக்க 14 கோடி ரூபாயில் ரிங் ரோடு சாலைகள் 30 கோடி ரூபாயில் சாலை விரிவாக்க பணிகள், 18 கிலோமீட்டர் தூரத்திற்கு 240 கோடி ரூபாயில் ரிங்ரோடு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.


மண் சாலைகள், தார்சாலைகளாஎ மாற்றப்பட்டுள்ளது. ஒசூர்,பாகலூர் 4 வழிச்சாலை நடந்து வருகிறது. ஒசூர் மாநகராட்சி அலுவலகமே நாம் தான் கட்டிணோம் அரசு கலைக்கல்லூரியில் கொண்டு வந்ததும் அதிமுக தான் ஒசூரில் 20 கோடி ரூபாயில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒசூர் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மையம், புதிய கட்டிடங்கள், தங்கும் விடுதி, நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.