தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது முக்கியத்துவம் குறித்து, ஹெல்மெட் அணிவதினால் ஏற்படும் நன்மைகளை வலியுறுத்தி சேலம் மாநகர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஜம் ஜம் ஹெல்மெட் கடையில் சேலம் வாக்காளர்களுக்கு வாக்களித்து விட்டு கையில் உள்ள மையை காட்டினாள் இன்று ஒரு நாள் மட்டும் (20/04/2024) ரூபாய் 249க்கு ஐ எஸ் ஐ சீல் பொறிக்கப்பட்ட ஹெல்மெட் வழங்கப்படும் என சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமை ஆற்றியதற்கான சாட்சியாக உள்ள கையில் வைத்துள்ள மையை காட்டி 249 ரூபாய்க்கு ஹெல்மட்டை வாங்கி சென்றனர்.



இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது காசிம் கூறுகையில், “ஒரு ஒருவரும் தனது ஜனநாயக கடமையை மாற்ற வேண்டும் என்பதற்காக நேற்று இந்த சலுகையை அறிவித்தேன். சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவியது. இதன் மூலம் வாக்களித்தவர்கள் 249 ரூபாய்க்கு ஹெல்மெட் காலை முதல் வாங்கி செல்கின்றனர். வாக்களிப்பது என்பது அனைவரும் ஜனநாயக கடமை ஆகும் அதனை தவறாமல் அனைவரும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு செலவை வழங்கப்பட்டது. இதன் மூலம் வாக்களிக்க சொல்லாத மக்கள் கூட 249 ரூபாய்க்கு ஹெல்மெட் கடைப்பதினால் வாக்களித்து விட்டு வந்து ஹெல்மெட் வாங்கிச் சென்றனர். இதில் அதிகமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் தனது முதல் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு ஹெல்மெட் வாங்கி சென்றனர். இது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” எனக் கூறினார்.


மேலும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தலைக்கவசம் நமது உயிர் காக்கும். வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்திலிருந்து நமது உயிரை காப்பாற்றும் கருவியாகவே தலைக்கவசம் உள்ளது. எனவே அதனை அனைவருக்கும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக இது போன்ற சலுகைகளை வழங்கி வருகிறேன். மக்களிடத்தில் பெரும் ஆதரவு உள்ளது. ஹெல்மெட் பலரினால் வாங்க முடியாத சூழ்நிலை இருப்பதால் தற்போது இது போன்ற சலுகைகள் மூலம் அனைவருக்கும் ஹெல்மெட் வழங்குவது மகிழ்ச்சியை தருகிறது எனவும் கூறினார்.