தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ”காவிரி நீர் பிரச்சினையை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீரை விடுவதற்கு தடுத்து வருகிறது. ஒன்றிய அமைச்சர் ஜகாவாத் தேனீர் கொடுத்தும் பிஸ்கெட்டும் கொடுத்து அனுப்பி வருகிறார். நேற்றைய தினம் பொம்மை அவர்கள் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் எந்த ஒரு உரிமையும் இல்லை என்று கூறி வருகிறார். கர்நாடகாவில் இருக்கிற சினிமா நடிகர்கள் பெங்களூரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிலர் சினிமா நடிகர்கள் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இது இறக்கமற்று இருக்கும் பொம்மையாக இருக்கலாம் குமாரசாமியாக இருக்கலாம் அல்லது காங்கிரஸ் கட்சி தேர்ந்த சித்தராமையாக இருக்கலாம் யாராக இருந்தாலும் தமிழகத்தின் சார்பாக விவசாயிகளின் சார்பாக எங்கள் உரிமை கேட்கிறோம், பிச்சை கேட்கவில்லை. சம்பா குருவை சாகுபடிக்கும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களுக்கு முறையாக தண்ணீர் தர அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு செய்ய வேண்டும் இதை செய்ய மறுக்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தக்கப்பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிய தொடர்ச்சியாக கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் தர்மராஜ் தலைமையிலான அமர்வு இடம் ஒதுக்கீடு வசதியை செய்து தர வேண்டும். எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதைப் பற்றி அவசர முடிவை எடுத்தார். உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் காவிரி நீர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மேலும் கூறிவந்த நிலையில் மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. எடப்பாடி அவர்கள் 10.5 சதவீதம் உரிமை கிடைக்குமா என்று கடந்த மூன்று ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கியும் வன்னியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்படுகிறது. தமிழக அரசு தற்போது செயல்படுத்த வேண்டும் காலதாமதம் செய்தால் பிற்படுத்தப்பட்ட வாரிய ஆணை மூலம் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறியும் நிலுவையில் கிடக்கிறது. இதைப் பற்றி தமிழக முதல்வர், தமிழக அமைச்சரிடம் பேசி வருகின்றேன். இது சமூக நீதி அரசு ஆதலால் இது வன்னியர்களுக்காக 10.5 சதவீதம் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேற்குவங்கம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சாதி வரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு வருகிறது. இதுபோல் தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோளை வைக்கின்றேன் என்று கூறினார். இதேபோன்று, கர்நாடகாவில் இருந்து நடிகர்களுக்கும் கேரளாவில் இருந்து நடிக்க வந்தவர்களுக்கு நமது தாயகமான சென்னையில் மணி மண்டபம் இருக்கிறது. கோபால நாயக்கர், சோமசுந்தர பாரதி, தந்தை பெரியாருக்கும் முன்னோடியாக இருந்த சதாசிவத்திற்கு நினைவு மண்டபம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பல்வேறு சுதந்திர போராட்டத்தை தியாகிகளுக்கு மணிமண்டபம் சிலைகள் வைக்க வேண்டும் என்று கேட்டு பெற்று கொடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் தற்போது மறைமுகமாக ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதிகாரம் மிக்க பதவிகளில் ஒரு தமிழர்கள் கூட இல்லாததே இதற்கு எடுத்துக்காட்டு என்றும் அதன் அடிப்படையில் ஆளுநரின் அதிகாரமே மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். சனாதனம் பேசுபவர்களுக்கு தமிழக காவல்துறை அளிக்கும் பாதுகாப்பு என்னை போன்ற உரிமைகளுக்காக போராடும் அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆட்சி காலத்தில் போது அழிக்கப்பட்ட கொள்ளை ஊழல் என பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை சேகரித்து வைத்துள்ளது. அரசியல் வாதிகளின் உச்சிக்குடுமி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை கையில் உள்ளது. அதனைப்பயன்படுத்தி அண்ணாமலை போன்றவர்கள் கொட்டம் அடிக்கிறார்கள் என்று கூறினார்.