சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து அடைத்து வைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே குடிநீர் தயாரிப்பு ஆலையை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி குடிநீர் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சேலம் மாவட்டத்தில் பாட்டில் அடைத்து வைக்கப்படும் 47 குடிநீர் நிறுவனங்கள் உள்ளது. அதன் உரிமையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் இயங்கியதா? என்று குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும், குடிநீர் பாட்டிலில் தண்ணீர் எவ்வாறு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தயாரிப்பு நிறுவனத்திடம் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் உரிமைத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து குடிநீர் பாட்டிலில் தயாரிப்புத் தேதி குறிப்பிடப்படுவதில்லை, கேன்களில் அசுத்தம் இருப்பது, ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டு விட்டு மற்றொரு நிறுவனத்தில் தண்ணீர் நிரப்புவது, பழைய தண்ணீர் கேன்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் வந்து கொண்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக தண்ணீர் பாட்டில்களில் கிருமிகள் இல்லாமல் தான் இருக்கும், கிருமிகள் இருக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். தண்ணீர் வாங்கும் போது உணவு பாதுகாப்பு உரிமம் இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பிஎஸ் எண்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவைகள் மக்கள் பார்த்து வாங்கவேண்டும் இதைபார்த்து வாங்கினால் கலப்படம், போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
அடைத்து வைக்கப்பட்ட குடிநீருக்கு காலாவதி தேதி என்பது அரசாங்கமும், தர நிர்ணய ஆணையமும் தண்ணீரைப் பொறுத்தவரை வழங்க முடியாது. நிறுவனங்களில் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரை பதப்படுத்தப்பட்ட நீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதில் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தப்படும் கருவிகளில் இருந்து அதை கணக்கீடு செய்யப்படும். 20 லிட்டர் கேன்களை பொறுத்தவரை ஒரு மாதம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் 300 மிமீ முதல் ஒரு லிட்டர் பாட்டில்களில் மூன்று மாதம் முதல் 9 மாதம் வரை பயன்படுத்தலாம். ஒரு பொருள் காலாவதி ஆகிவிட்டால் அந்த பொருளை விற்பனை செய்யக்கூடாது. மீறுபவர்கள் மீது வழக்குப் பகுதியில் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தரம் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணிற்கு போன் செய்தோ அல்லது வாட்ஸ் அப் மூலமாக தகவல் கொடுத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.