ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்க பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள்  மார்கழி  முதல் நாளிலிருந்து வாசலில் கோலமிட்டு பிள்ளையார் வைத்து முதல் நாளுக்கு ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு 2 பூவும் என மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு, அதில் வண்ணமிடுவது வழக்கம்.

 

 

 

 இந்நிலையில்  இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்கழி முதல் நாள் என்பதால் பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசல், சமையல் அடுப்பெனை சுத்தம் செய்து, மாட்டுச் சானம்  தெளித்து கோலமிட்டனர்.  இந்த கொலத்தின் நடுவில் மாட்டுச்சானத்தில் பிள்ளையார் வைத்து, அதில் பூசணி  பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களை வைத்தனர். ஒரு சில பெண்கள் மவுன விரதமும் இருந்து வருகின்றனர். தொடர்ந்து நாளுக்கு ஒரு என முதல் நாளில் ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு இரண்டு பூக்களும் என வாசலில் வைத்து வரப்படும்.

 

 

 

தொடர்ந்து மார்கழி மாதம் கடைசி நாளான பொங்கல் தினத்தில், முப்பது நாள் கோலமிட்டது போல அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து, தை முதல் நாளை வரவேற்பர்.  இதற்காக இன்று மார்கழி முதல் நாளில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் பல வண்ணங்களில் கோலமிட்டனர்.

 

---------------------------

 

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக குறைந்தது.

 

 



 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக  அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன  பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து இருந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து மூன்றாவது நாளாக நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை வினாடிக்கு 16,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.