சேலத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வாங்க சென்ற மூதாட்டியிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. லஞ்சம் கேட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு அளித்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த முனியம்மாள். இவரது தந்தையிடமிருந்து வாய்மொழி பாத்தியமாக பிரித்து விடப்பட்ட 46 சென்ட் நிலத்தை அவரது உறவினருக்கு கிரயம் செய்ய கொண்டதன் பேரில். 



கடந்த 12 ஆம் தேதி மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது உறவினருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை சர்ப்பதிவாளர். அலுவலகத்திற்கு சென்று கேட்டபொழுது கிரையம் செய்து கொடுத்த முனியம்மாளுக்கு அனுபவ சான்று இருந்தால் தான் பத்திரம் வழங்கப்படும் என சர்பதிவாளர் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை சென்று விளக்கம் கேட்டதற்கு காடையாம்பட்டி தாசில்தார் அனுபவ பாத்திய சான்றிதழ் வைக்கவில்லை என்றும் அதனை பெற்று வரவேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில் சார் பதிவாளர் ஹேமலதா முனியம்மாள் இறந்ததாக போலியான இறப்பு சான்று ஆவணத்தை வழங்குமாறு காடையாம்பட்டி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் உயிருடன் இருக்கும்போது தன்னிடம் இறந்துவிட்டதாக தகவல் கேட்டுள்ளீர்கள் என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறினார். 



இதனை சரிசெய்து பத்திரத்தை தர வேண்டுமென்றால் 20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் முனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். பதியப்பட்ட பத்திரத்தைப் பெற சார் பதிவாளர் அலுவலகம் சென்ற மூதாட்டி இடம் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.