உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தை கண்டுகளிப்போம் என்ற நிகழ்ச்சி சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் கொடியாசைத்து துவங்கி வைத்தார். இந்த நிலையில் தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபலமான சமூக ஊடகவியலாளர்களை கொண்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் பிரபலமடையாத சுற்றுலா தலங்களில் உள்ள சிறப்புகளை அறிந்து சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த, முதலாவதாக நேற்று ஜவ்வாது மலை சுற்றுலா தளத்திற்கு சென்று, ஆய்வு செய்து அங்குள்ள சிறப்புகளை அறிந்தனர். பின்னர் இன்று தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற சுற்றுலாத் தலமாக இருந்தாலும் மக்களிடையே இன்னும் பிரபலமடையாமல் உள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 10 பேர் கொண்ட குழு ஒகேனக்கலின் சிறப்புகளை அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வந்தனர்.
தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பரிசல் சவாரியை, பரிசலில் சென்று முதலில் செய்தனர். பின்னர் இங்கு இயற்கையாக உருவாகி இருக்கும் அருவிகள் மற்றும் அவற்றை கண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் தொங்கு பாலத்தின் மேல் இருந்து அருவிகளை கண்டு புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து நாங்கள் இதுவரை, கண்டிராத வகையில் இந்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் இருந்ததாக மகிழ்ச்சியடைந்த தெரிவித்தனர்.
பாலக்கோடு நகரில் தனியார் பைனான்சில் பூட்டை உடைத்து 1 இலட்சம் ரூபாய் கொள்ளை-சிசிடிவி காட்சியை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை .
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு குள்ளப் பெருமாள் தெருவை சேர்ந்த செந்தில் (42) என்பவர் தீர்த்தகிரி நகரில் தனியார் பைனான்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து மறுநாள் காலை மீண்டும் அலுவலகத்திற்க்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் வைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் ரூபாய் திருடுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று, வாயில் சிறிய டார்ச் லைட் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக திரிவதும், லாக்கரை உடைத்து, அதிலிருந்து பணத்தைத் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பைனான்ஸில் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். தற்போது இந்த சி.சி.டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாலக்கோட்டில் கடந்த 3 மாதத்தில் இது போன்று திருட்டு அதிகரித்து வருவதால், பொதுமக்களும், வணிகர்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.