தருமபுரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக சர்வதேச சிறுதானிய 2023 ஆண்டை முன்னிட்டு, சிறுதானிய கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

 

சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் தமிழக அரசு சிறுதானிய விவசாயிகள் சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வiயிலுவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்து காட்சிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடத்தி வருகிறது. 

 

இதனை தொடர்ந்து இன்று தருமபுரியில் சிறுதானிய கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்சியில் அமைக்கபட்டிருந்த சிறுதானிய பாரம்பரிய வகைகள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார். இதில் நம் முன்னோர் காலத்தில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஏர் கலப்பை, உலக்கை, குந்தானி, இருவாசால், தானியகுதிர் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்திருந்தனர். மேலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி, சிறுதானிய உணவு வகைகளை சுவைத்தார். இதனை தொடர்ந்து ட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.



 

 சிறுதானியங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இளைஞர்களுக்கு தெரியபடுத்த வேண்டும், தற்போதைய தமிழக அரசு சிறுதானிய விவசாயத்தை ஊக்குபடுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதோடு, அதில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், தருமபுரி மாவட்டத்தில் 1 இலட்சத்து 10 ஆயிரம் சிறுகுறு விவசாயிகள் 53 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சிறுதானிய விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறிய அவர் சிறுதானிய ஆண்டாட அறிவிக்கபட்ட இந்த சமயத்தில் தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தழிழக அரசு அவித்துள்ளது. எனவே சிறுதானிய விவசாயம் செய்யும் விவசாயிகள் முழு ஈடுபாட்டோடு சிறுதானிய விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

 

மேலும், சிறுதாயி விவசாயிகள் அவர்கள் விளைவிக்கும் பயிர்களை சந்தைபடுத்தும் நோக்கில் 3 தனியார் நிருவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த கண்காட்சியில் சிறுதானியங்களின் மருத்துவ குணங்கள் குறித்து பேராசிரியர் முனைவர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். மேலும் இயற்கை முறையில் சிறுதானியங்கள் உற்பத்தி மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து பேராசிரியர்கள், விவசாயிகளிடம் எடுத்து கூறினர். இந்த நிகழ்சியில் வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.