தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15, 16 தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 முன்னிட்டு தருமபுரியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்திய சிறுதானிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவினர், தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளுடனா பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்த சிறுதானிய பொங்கல் விழாவில், குதிரைவாலி, திணை உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு தனியார் செவிலியர் கல்லூரியில் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் சிறுதானியங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழாக்களில் சிறுதானியங்களை வைத்து பொங்கல் கொண்டாட வேண்டும். நமது பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் பொருட்டு சிறுதானிய விதை திருவிழாக்கள், சத்தான உணவு திருவிழாக்கள் போன்றவற்றை கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பொங்கல் விழாவில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவினர், இந்திய சிறுதானிய கூட்டமைப்பு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி -2
நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியத்தை 5000 ஆக உயர்த்தி வழங்க, தருமபுரியில் கிராமிய கலைஞர்கள் தீர்மானம்.
தருமபுரியில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பம்பை, பறையிசை, நாடகம், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்ட நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்கள் கலவாது கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும் தமிழ்நாடு நாடக மன்றம் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தில் உறுப்பினர் படிவத்தினை பெற்று உறுப்பினராக இணைக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதை மாவட்ட அளவில் உள்ள தகுதியுள்ள கலைஞர்களுக்கு மூன்று பேருக்கு வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியத்தை 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதனை தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் மத்தியில் பேசிய மாநில தலைவர் சின்னசாமி, கடந்த காலங்களில் உள்ள அரசு கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்தை பற்றி கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது உள்ள திமுக அரசு கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருது. இதனை கிராமிய கலைஞர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்களை காட்டிலும், தற்பொழுது திமுக அரசு தமிழ்நாடு முதலமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.