தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ப்பட்டியில் உள்ள சேவாலயா முதியோர் இல்லத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்தப் பொங்கல் விழாவில் மண்பானை வைத்து புத்தரிசியிட்டு பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு வெண்பொங்கலை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கி கொண்டாடினார். மேலும் முதியவர்களுக்கு புத்தாடை வழங்கி, பொன்னாடை அணிவித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆதரவின்றி இருப்பதாக நினைத்து வருத்தப்பட கூடாது என்பதற்காக முதியோர் இல்லத்தில், சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தலைமையில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதால், முதியோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பொங்கல் விழாவில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சங்கம் சார்பில், சிறுதானிய பொங்கல் விழா கொண்டாட்டம்.
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் பொங்கலுக்கு முன்னதாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி நகரில் உள்ள தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் மண்பானை வைத்து பச்சரிசியிட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பானையில் பொங்கல், பொங்கி வழிந்து வரும் நேரத்தில் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து கும்மி பாட்டு பாடி கும்மியடித்தனர். மேலும் பொங்கலோ பொங்கல் என குழவியிட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். இதனை தொடர்ந்து பெண்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்றனர்.
இந்தப் பொங்கல் விழாவில் பெண்களுக்கு இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், பலூன் ஊதுதல், பலூன் காற்றின் மூலம் ஊதி தள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் பொங்கல் விளையாட்டு போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.