தருமபுரி: அரூரில் மின்கசிவால் தலையணை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. 


தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நாச்சினாம்பட்டி கிராமத்தில், சேலம் நான்கு வழிச்சாலையில், ஆனந்தகுமார், என்பவருக்கு சொந்தமான தலையணை குடோன் இருந்து வருகிறது. இந்த குடோன் சுற்று சுவரில் இரும்பு கேட் அமைக்கும் போது இரும்பு கம்பிகளை வெல்டிங் வைத்துள்ளனர். அப்பொழுது திடீரென குடோனுக்குள் இருந்த மின்ஒயரில் தீப்பொறி பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த நஞ்சுகளில் தீப்பொறி பரவி, எரிய தொடங்கியது‌. தொடர்ந்து தீ பரவியதை அறிந்த பக்கத்தில் இருந்தவர்கள்  உள்ளே ஓடிப்போய் பார்த்தபோது தலையணை, பஞ்சு தீ பிடித்து எரிந்துள்ளது. மேலும் காற்று அதிகமாக வீசியதால் மல மல வென்று தீ பரவியது.




இதனையடுத்து அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். ஆனால் தீ பரவியதில் தலையணைக்கு பயன்படுத்த வைத்திருந்த பஞ்சுகள், 6 தையல் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தால் சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. மேலும் இந்த தீ விபத்து குறித்து அரூர் காவல் துறையினர் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.