தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சந்தைக்கு தருமபுரி, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தொப்பூர், மிட்டாரெட்டிஹள்ளி. மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் வாங்கவும், விற்கவும் வருகின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதால், நேற்று வாரச் சந்தைக்கு கால்நடைகள் மற்றும் விவசாயிகள்  வரத்து அதிகரித்திருந்தது.

 

நேற்று சந்தைக்கு சுமார் 2500 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வந்திருந்ததது. காணும் பொங்கல தினத்தில் இறைச்சிக்காக ஆடுகளை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதனால்   நல்லம்பள்ளி சந்தையில் இன்று விலை உயர்ந்து, ஒரு ஆடு குட்டி ஆடு 5000 ரூபாய் விலை தொடங்கி ஆடுகளின் எடைக்கேற்ப 8000, 10,000 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை சுமார் 2000 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைத்ததாக ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  இன்றைய நல்லம்பள்ளி வாரச் சந்தையில்,  2500 ஆடுகள் சுமார் ரூ. 2 கோடிக்கும்,  விற்பனையானது.



 

செய்தி -2

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு என சொல்ல மறுத்த ஆளுநர் ரவியை கண்டித்து, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூாி மாணவ, மாணவிகள் நுழைவாயில் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்பொழுது சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என சொல்லாமலும், ஒரு சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் சட்டமன்ற கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்பொழுது தமிழ்நாடு என அழைக்க மறுத்த ஆளுநர் ரவி கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர்.



 

இந்நிலையில் தமிழ்நாடு என்று அழைக்க மறுக்கும் ஆளுநர்  ரவியை கண்டித்து, தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அடி பணியாது, ஆளுநர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.