தருமபுரி: மலைக் கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர்; மகிழ்ச்சியடைந்த இருளர் இன மக்கள்..!
ஏரியூர் அடுத்த மலைக் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று திடீர் ஆய்வு செய்து, மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டதால், மகிழ்ச்சியடைந்த இருளர் இன மக்கள்.
Continues below advertisement

மலைவாழ் மக்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிகரல அள்ளி மலை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி திடீரென ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள உள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி, பொதுமக்களிடம் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழக அரசு பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்காக இருப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அரசு எண்ணற்ற பலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.
மேலும், இப்பகுதியில் மக்களுக்கு வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதன் மூலம் உங்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு இலவசமாக அளித்து வருகின்றது. உயர்ந்த கல்வியை பெற்றால் தான் உங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எனவே அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வையுங்கள். இங்குள்ள படித்த குழந்தைகளும், உயர்கல்வி முடித்த குழந்தைகளும் தொடர்ந்து பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டு வந்தால் நிச்சயம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

அங்கன்வாடி மையங்களுக்கு செல்லும் குழந்தைகள் முதல் பள்ளியில் பயிலும் குழந்தைகள் வரை சத்தான உணவு, சத்து மாவு, இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு இலவசமாக வழங்கி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பெற்று பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
Also Read | Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சுவலி.. காவேரி மருத்துவமனையில் அனுமதி!
மேலும் அஜ்ஜனஅள்ளி, வீரப்பன் கொட்டாய் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை வசதி மற்றும் தூய்மையான, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (OHT) அமைத்துக் கொடுக்க ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வரலாற்றில் முதல் முதன் முறையாக, தங்களது கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் நேரில் வந்து, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டதால், மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆய்வின் போது, பென்னாகரம் வட்டாட்சியர், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Continues below advertisement
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.