தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகேயுள்ள  ஏர்கோல்பட்டியைச் சேர்ந்த  சிவபிரகாஷ் என்பவரின் மகள் சபீலா(21) என்பவரை காணவில்லை என்று சிவபிரகாஷ்  ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  பட்டக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகள் தரண்யா (22) என்பவர் ஷபிலாவை அழைத்துக் சென்றதாக காவல் துறையினருக்கு  தகவல் கிடைத்துள்ளது. 

 

இதனையடுத்து  ஏரியூர் காவலர்கள் கோயம்புத்தூர் சென்று இருவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், தரண்யா நங்கவள்ளி சக்தி கல்லூரியில் பிஎஸ்சி பயோ டெக்னிக்கல் முடித்துவிட்டு கோயம்புத்தூரில் டைடல் பார்க்கில் ட்ரைனிங் இருந்து வருவதாகவும், மேலும் அதே கல்லூரியில் சபீலா பிஎஸ்சி பயோ டெக்னிக் மூன்றாம் வருடம் படித்து வந்ததாகவும், இருவரும் ஏரியூரில் இருந்து கல்லூரி வாகனத்தில் தினமும் சென்று வந்த பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக விசாரனையில் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து விசயம் அறிந்த சபீலாவின் குடும்பத்தார் கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்துள்ளனர்.


 

மேலும் ஷபிலா, தரண்யாவை காண்பதற்காக கடந்த 30ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கோயம்புத்தூரில் இருந்து இருவரும் சென்னை உள்ளிட்ட இடங்களில் சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று  ஏரியூர்  போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு  அழைத்து வந்து விசாரித்து இருவரையும் அவர்களது பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு நாளை  காலை 9 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகும் படி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரண்டு பெண்களுக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்காக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  தொடர்ந்து  இன்ஸ்பெக்டர்  வான்மதி இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தார்.

 

 ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து போக முடியாது என்றும், நாங்கள் இருவரும் ஒன்றாக தான் வாழ்வோம் என்றும் கூறி, பின்பு  தரண்யா கழிவறை காவல்  கழிவறைக்கு செல்வதாகச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் வலது கையில் மணிக்கட்டில் லேசாக அறுத்துக் கொண்டும் கழுத்தில் இரண்டு அங்குலம் நீளத்திற்கு அறுத்துக் கொண்டுள்ளார். இதை கண்ட காவலர்கள்  பென்னாகரம் அரசு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டனர். தற்போது மேபல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.