தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வெகு விமரிசையாக கொண்டாபட்டு வருகிறது.  இத்திருவிழாவானது கடந்த  6ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று 12 ஊர் கிராம மக்கள் மற்றும்  உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி  கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், லாரிகட்டி இழுததும்;, அந்தரத்தில் தொங்கியபடி செல்லுதல், காவடி ஆட்டம், கோலாட்டம், கரகாட்டம் ஆகியவை வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

 

மேலும், பெண்கள் மாவிளக்கு தட்டு தலையில் சுமந்து திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 2கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று ஸ்ரீ புதூர்மாரியம்மன் கோவிலை  அடைந்து வேன்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.



 

இந்நிலையில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ராட்டினம் சுற்றுதல், போன்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் திருவிழா வரும் பொதுமக்கள் தேவைகளுக்காக தின்பண்டங்கள் வீட்டு உபயோக பொருட்கள் விளையாட்டு பொருட்கள் காய்கறிகள்  அடங்கிய பல்வேறு மளிகை விலையிலான கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் குழந்தைகள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உள்ள ராட்டினங்களில் திருவிழாவுக்கு வந்தவர்கள் அமர்ந்து மகிழ்ந்தனர். இந்நிலையில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ராட்டினத்தில் ஏறி உள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் விரைவாக ராட்டினம் சுடுதலை நிறுத்தியுள்ளனர். இதனால் கூறியதை காட்டிலும் 2 சுற்றுகள் குறைவாக சுற்றியதாக கூறி வாலிபர்கள் மீண்டும் ராட்டினத்தை சுற்ற சொல்லி ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.



 

இந்நிலையில், ராட்டின ஊழியர்கள் அதை மீண்டும் இயக்க மறுத்ததால் வாய் வார்த்தை முற்றி இரு தரப்பிற்க்கும் இடையே வாக்குவாதம்,  கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் அடித்துக் கொண்டனர் இதனால் ராட்டினம் சுற்றும் இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராட்டினம் சுற்றும் இடத்தில் இரு தரப்பு மோதிக் கொள்ளும் கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அறநிலைத்துறை சரியான முறையில் விழா குறித்து முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் இந்த திருவிழாவில் அரங்கேறி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.