சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் திடீரென பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. கீழ்தளத்தில் குடியிருந்த கோபி என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகியது தெரியவந்தது. இதில் கோபியின் தாய் ராஜலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 




மேலும் 13 பேர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய பூஜாஸ்ரீ (10), கார்த்திக்ராம் (18), பத்மநாபன் (49), தேவி (36) ஆகியோரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூஜாஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் மீதம் உள்ள நபர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மீட்பு பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் பாலசுப்பிரமணியம் அருள் ஆகியோர் மேற்பார்வை இட்டு வருகின்றனர். கோவையில் இருந்து சிறப்பு மீட்பு குழுவினர் தற்போது வருகை தந்துள்ளனர்.



பாலியல் தொந்தரவால் உயிரிழந்த கரூர் மாணவி குடும்பத்திற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்


இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமடைந்த 11  பேரில் 90 சதவிகித தீக்காயங்களுடன் கோபி என்பவர் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை தொடர்ந்து அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு வரும் நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வர உள்ளனர்.


கந்து வட்டி புகாரளித்தால் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து - மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு