சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1524 ஆக உள்ளது.மேலும் 236 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 88,180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,526 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1,823 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். 



கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதனிடையே, சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சேலம் மாவட்ட அளவில் 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒரு அரசு மருத்துவமனையில் முகாம் நடைபெறுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு என 10600 தடுப்பூசி இருப்பு உள்ளது. கோவிஷீல்டு கோவாக்சின் என இரண்டு தடுப்பு மருந்துகளும் போடப்படுகின்றன.



தடுப்பூசி போட வரும் கர்ப்பிணி பெண்கள் தாய் சேய் நல பாதுகாப்பு அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பெண்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 380 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் தொடர்ந்து வராத காரணத்தால் அவ்வப்போது பணிகள் நிறுத்தப்படுகின்றன. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 40 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று இருவர் உயிரிழப்பு. மேலும் 83 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 38 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 71 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 612 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.