சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1521 ஆக உள்ளது. மேலும் 227 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 87,944 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,371 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1906 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். 


இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,51,385 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 138 மையங்களிலும் இன்று தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் செலுத்தப்படவில்லை. சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய தொற்றை விட இரண்டு அதிகமாகும். எனவே, மக்களிடையே மீண்டும் தொற்று அதிகரித்து விடுமோ என்ற பயம் எழுந்துள்ளது. 




தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 78 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 43 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 65 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 644 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.