தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபாண்டிற்கு இரண்டு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரவை பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதில் அரவை பணியை தமிழக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பதாக அழைப்பிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் திமுக மேறகு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்நிலையில் பணி நிமித்தமாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. மேலும் தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தியும் வேறு பணியில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வராததால் அரவப் பணியை தொடங்கப்பட்டது. அப்பொழுது கரும்பு அரவைப் பணியை யார் துவக்கி வைப்பது என்பதில், திமுக-அதிமுக தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது திமுகவைச் சார்ந்த பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது ஒரு புறம் திமுக-அதிமுக தொண்டர்களிடையே கை கலப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, பாதுகாப்பாக சர்க்கரை ஆலையை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை தொடங்கி வைக்கும்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் வராததால், திமுக-அதிமுக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரிமங்கலம் வாரச் சந்தையில், தேங்காய் வரத்து அதிகரிப்பு-1 இலட்சம் தேங்காய் ரூ.15 இலட்சத்திற்கு விற்பனை.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சந்தைக்கு, தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்களை, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், முதல் ரக தேங்காய், 15 முதல், 25 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 6 முதல், 13 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் இன்றைய வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து, கடந்த வாரதை விட அதிகரித்தது. இன்றைய காரிமங்கலம் வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து அதிகரித்து, 1 இலட்சம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்றைய சந்தையில், கடந்த வாரத்தை விட விலை அதிகரித்து, முதல் ரக தேங்காய், 15 முதல், 25 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 6 முதல் 13 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த தேங்காய்களை மாலுார், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இன்று 1 இலட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் அனுமன் ஜெயந்தி வருவதால், தேங்காய் முழுவதும் ரூ.15 இலட்சத்திற்கு விற்பனையானது. இதனால் கடந்த வாரம் தேங்காய் வரத்தும், விலையும் அதிகரித்து இருந்தது. மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், இனிவரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.