தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் அரூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், உத்தரவின் பெயரில் தனிப்படை பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  தீர்த்தமலை அடுத்த பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சிவகுமார் என்பவர் வேலை செய்கிறார். இந்த நிலையில் இருவரும் கஞ்சா விற்பனை செய்வது உறுதியான பின்பு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட காவல் துறையினர் கடையில் சோதனை செய்தனர். அப்போது சிவகுமார் என்பவர் தப்பி ஓட முயன்றுள்ளார். காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



 

அப்போது மறைத்து வைத்திருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய பிரியாவை பெரியார் நகரில் வசித்து வரும் வீட்டில் கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பிரியா, சிவக்குமார் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அரூரில் சாலையோரம் உள்ள ஜவுளி கடையில் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 



 

தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து கடுமையாக சரிவு-நேற்று முன்தினம் ரூ.15.25 இலட்சத்திலிருந்து ரூ.31 இலட்சத்திற்கு  ஏலம் போன நிலையில், நேற்று ரூ.27 இலட்சம் குறைந்து ரூ.4 இலட்சத்திற்கு ஏலம்.

 



 

தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு  ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து அதிகரித்து ரூ.15 இலட்சத்திற்கு விற்பனையானது. தொடர்ந்து அடுத்த மீண்டு ஒரு மடங்கு அதிகரித்து ரூ.31 இலட்சத்திற்கு விற்பனையானது.

 



 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற  ஏலத்தில், பட்டுக்கூடுகள் வரத்து கடுமையாக சரிந்தது. இதில் 10 விவசாயிகள் கொண்டு வந்த 579 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.4 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம்  ரூ.530 க்கும், அதிகபட்சமாக ரூ.715-க்கும், சராசரியாக 651 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.15 இலட்சத்திலருந்து, பட்டுக்கூடு வரத்து அதிகரித்து ரூ.31இலட்சத்திற்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று ரூ.27 இலட்சம் குறைந்து ரூ.4 இலட்சத்திற்கு மட்டுமே விற்பனையானது. மேலும் பட்டுக்கூடுள் வரத்து குறைவு, ஆனால் விலை அதிகரித்து, விற்பனையானதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.