வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட முதல்வர் அனுமதிக்க வேண்டும் - வேல்முருகன் கோரிக்கை

’’வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வருக்கு கடிதமாக வழங்கி உள்ளோம்’’

Continues below advertisement

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மிக கடும் சட்டம் கொண்டு வர வேண்டும், குழந்தைகளை கண்காணிப்பதற்கு பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல், அறிவுரைகளை அரசு வழங்க வேண்டும், பாலியல் வன்கொடுமை ஈடுபடும் நபர்கள் மீது உச்சபட்ச தண்டனை கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்ற வேண்டுகோளையும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வைத்துள்ளார்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வேல்முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது, தமிழக அரசு வேலைவாய்ப்பில் பூர்வகுடி தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க சட்டம் நிறைவேற்றி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கையையும் முன்வைத்தார்.

மேலும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மிக கடும் சட்டம் பலப்படுத்த வேண்டும்.பிஞ்சு குழந்தைகளை கண்காணிப்பதற்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,பாலியல் வன்கொடுமை ஈடுபடும் நபர்கள் மீது உச்சபட்ச தண்டனை கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். இதற்கான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து கடுமையாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். ஜெய்பீம் பட விவகாரம் குறித்துப் பேசிய வேல்முருகன், இதற்கு முன்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களில் அந்த காட்சிகளை, வசனங்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நீக்கியுள்ளனர். அந்த நடைமுறை ஆரோக்கியமானது.

நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு விடுவிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் எங்களுக்கு உரிய இடங்களை திமுக ஒதுக்கீடு செய்யும். கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதேபோல் தொடர்ந்து செயல் பட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை உடனே ஒதுக்கி செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வருக்கு கடிதமாக வழங்கியுள்ளதாகவும், அரசே ஏற்று மணிமண்டபம் கட்டினால் வரவேற்போம். இல்லாவிட்டால் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மணிமண்டபம் கட்ட கொள்ள அனுமதி வழங்க வேண்டும் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola