சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மே தின பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது கொட்டும் மழையில் நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருண பகவான் கோவத்தில் உள்ளாரா என்று தெரியவில்லை. வருண பகவான் திமுக மீது மட்டும் கோபத்தைக் காட்டுங்கள் எங்கள் மீது கோபத்தை காட்டாதீர்கள். உழைக்கும் மக்களுக்கு துணையாக இருக்கின்ற கட்சி அதிமுக. எங்கெல்லாம் உழைப்பாளி இருக்கிறார்களோ அங்கெல்லாம் அதிமுக அவர்களுக்கு துணையாக இருந்து பாடுபடுகின்ற இயக்கம் அதிமுக. எட்டு மணி நேரம் ஓய்வு எடுத்தால் மட்டுமே அடுத்த எட்டு மணி நேரம் பணி செய்ய முடியும்.
இன்றைய தினம் திமுக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தனர். நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும், மூன்று நாட்கள் விடுமுறை என்று கூறினர். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இந்த சட்டத்தை எதிர்த்தது. அதிமுக சார்பாக கண்டனம் அறிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக முதல்வர் சட்டத்தை கொண்டு வர துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். தொழிலாளருக்கு நன்மை செய்கின்ற சட்டத்தை கொண்டு வந்தால் அது நன்மை, ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சட்டத்தை திரும்ப பெற்றது திமுக. திமுக கட்சி சார்ந்த அமைச்சர்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேனாறும் பாலரும் கரைபுரண்டு ஓடுவது போல் பேசி வருகிறார்கள்.
ஆட்சி பொறுப்பேற்று 24 மாத காலங்கள் ஆகிறது, எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வந்தார்களா என்று கேள்வி எழுப்பினார். எந்த ஒரு புதிய திட்டங்களை கொண்டு வந்து பணிகளை முடித்து திறக்கவில்லை. திமுக அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் பேசி வருகிறார்கள். மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை செய்திகள் மட்டும் தான் வருகிறது. தமிழக மக்களிடம் அடிக்கடி ஞாபகப்படுத்தி கொண்டிருந்தால்தான் திமுக, அதிமுக காட்சிகளில் என்ன நடக்குது என்று சீர்தூக்கி பார்த்து எது சிறந்த ஆட்சி என்று பார்ப்பார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 24 மாத காலத்தில் ஒரு பாலத்திற்காக அடிக்கல் நாட்டி வைத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை எல்லாம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி, திமுக ஆட்சி எப்பொழுது போகும், அதிமுக ஆட்சி வரும் என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலாக உள்ளது என்று கூறினார்.