கிருஷ்ணகிரி மாவட்டம் தர்கா பகுதியில் உள்ள கே.ஏ.நகர் வெங்கடாபுரம் ஊராட்சி கிராம பகுதியில் வங்காள தேசத்தை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் சட்டத்திற்கு புறம்பாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருப்பதாக கிருஷ்ணகிரி கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் இந்த தம்பதினர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த இக்பால் முல்லா (34), அவரது மனைவி தஸ்லீமா (25), இக்பால் முல்லாவின் உறவினர் லக்கி (19) ஆகியோர் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது வெளிநாட்டில் உள்ள போது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இக்பால் முல்லா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மும்பை வந்ததாகவும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்தவுடன் என்னுடைய மனைவி, உறவினர் மற்றும் தனது 2 குழந்தைகளுடன் அங்கு வந்ததாகவும் கூறினார். மேலும் இக்பால் முல்லா தனது நண்பரின் ஆலோசனைப்படி நான் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் வங்காளதேசத்தில் இருந்து வந்ததற்காக இக்பால் முல்லா, தஸ்லீமா, லக்கி ஆகிய 3 நபர்களையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில். தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி இவர்களுக்கு தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வங்காளதேச தம்பதி உள்பட 3 நபர்களுக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இதனை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.
இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையினர் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று இதில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் இங்கு அதிக அளவில் வெளிநாட்டு நபர்களின் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.